திருப்பரங்குன்றம்:மதுரை விளாச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பொம்மைகள், குடில்கள் தயாராகின்றன.இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சீசனுக்கு ஏற்றாற் போல் களிமண், பேப்பர் கூழ், சிமென்ட், பிளாஸ்டர் ஆப் பாரிசில் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது அங்கு கிறிஸ்துமஸ் பொம்மைகள், குடில்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.கவிதா கூறியதாவது: பரம்பரையாக பொம்மைகளை தயாரிக்கிறோம். மூன்று இஞ்ச் முதல் இரண்டு அடி உயரம் வரை கிறிஸ்துமஸ் பொம்மைகள், குடில்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்பொம்மைகள் அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. தற்போது பொம்மைகள் உற்பத்திக்கு ஆர்டர்கள் குறைந்து விட்டது. விலையையும் மிக குறைவாக கேட்கின்றனர். மழை பெய்தால் பொம்மைகளில் பெயின்ட் அடிப்பது, வெயிலில் உலர்த்துவது சிரமம் என்றார்.