பதிவு செய்த நாள்
11
டிச
2018
03:12
சென்னிமலை: சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடந்த, சோம வார நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்தனர். கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமானது கார்த்திகை சோமவாரம். நவம்பர், 19ம் தேதி கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை வந்ததால், அன்று முதல், சோமவார விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.
நேற்று (டிசம்., 10ல்) கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமை. இதையொட்டி, மாலை, 4:00 மணிக்கு, சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. கலச பூஜை, சங்கு பூஜை, 108 மூலிகைகள் கொண்ட யாக பூஜை ஆகியவை நடந்தது. கைலாசநாதருக்கு, 108 சங்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. சோமவார விரதமிருந்த பக்தர்கள், திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக, சவுந்திரநாயகி சமேத சந்திரசேகர் சுவாமி, திருஉலா நிகழ்ச்சி நடந்தது.