பதிவு செய்த நாள்
11
டிச
2018
03:12
பவானி: பவானி காவிரி வீதியில், விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் உள்ளது. கோவிலின் கும்பாபிஷேக முதலாமாண்டு விழா, 12ம் ஆண்டு கார்த்திகை மாத சோமவார, 1,008 சங்காபிஷேக விழா நேற்று (டிசம்., 10ல்) நடந்தது.
அதிகாலை 5:00 மணிக்கு, மங்களவாத்தியத்துடன் விழா துவங்கியது. 9:30 மணிக்கு, விநாயகர் பூஜை, 10:00 மணி முதல், கலச பூஜை, சங்கு பூஜை, ருத்ர பாராயணம், ஜபம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடந்தது. 12:00 மணிக்கு, மஹா தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு அக்னிகாரியம், விஷேச, 108 திரவிய ஹோமங்கள், 7:00 மணிக்கு, ருத்ர கலச அபிஷேகம், 1,008 சங்காபிஷேகம் நடைபெற்று, மஹா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில், பவானி, குமாரபாளையம், காளிங்கராயன்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.