அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா வரும், 13ம் தேதி துவங்குகிறது.அன்று காலை 10:30 மணிக்கு கிராம தேவதை வழிபாடு நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. 14ம் தேதி காலை 6:30 மணிக்கு கணபதி வேள்வியும், 7:30 மணிக்கு கொடியேற்றமும், சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. மாலையில் யாகசாலை பூஜை துவங்குகிறது.தினமும் மாலையில் சுவாமி திருவீதியுலா 18ம் தேதி வரை நடக்கிறது. 19ம் தேதி காலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், மாலையில் சொற்பொழிவும் நடக்கிறது. 20ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.