மங்களநாதர், பூவேந்திய நாதர் கோயில்களில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2018 12:12
சாயல்குடி:உத்தரகோசமங்கை மங்களநாதர், சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது. சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது.பழமையும், புராதன சிறப்பும் பெற்ற இந்த சிவாலயம், ராமாயண இதிகாசத்துடன் தொடர்பு பெற்றது. கார்த்திகை சோமவார திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. மூலவர் பூவேந்தியநாதர் சுவாமி சன்னதிக்கு முன்புறம் 108 வலம்புரிச்சங்கில் புனித நீர் ஊற்றப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க கோயில் குருக்கள் பூஜைகளை செய்தார். பின்னர் சங்கில் உள்ள புனித நீரைக்கொண்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
*உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் காலை 10:00 மணிக்கு மங்களநாதர் சன்னதி முன்புறம் சங்குகளை வரிசையாக அடுக்கி, அதில் புனித நீர் ஊற்றப்பட்டு கோயில் சிவாச்சாரியார்களால் பூஜை செய்யப்பட்டது. மூலவர் மங்களநாதசுவாமிக்கு சங்கில் உள்ள புனித நீரால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார பக்தர்கள் தரிசனம் செய்தனர். கயிலை வாத்தியம் முழங்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.