பதிவு செய்த நாள்
14
டிச
2018
02:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு கைலாசநாதர் மற்றும் இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம், செவிலிமேடு கிழக்கு பகுதியில், கைலாசநாதர் மற்றும் இஷ்டசித்தி விநாயகர் கோவிலில், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், விஷ்ணு, மஹாவிஷ்ணு துர்க்கை, சனீஸ்வரர், ராகு-கேது, பைரவர் உள்ளிட்ட தனித்தனி சன்னிதி உள்ளது.இக்கோவிலில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கோட்டைகாவல்கிராமம்காஞ்சிபுரம் அடுத்த கோட்டை காவல் கிராமத்தில், படவேட்டம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி, கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தன.நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கின. கும்பாபிஷேக தினமான நேற்று காலை: 8.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோட்டைகாவல் கிராம மக்கள் செய்திருந்தனர்.