பதிவு செய்த நாள்
14
டிச
2018
02:12
திருப்போரூர்: திருப்போரூர் அய்யப்பன் கோவிலில், 41ம் ஆண்டு மகர விளக்கு பூஜை விமரிசையாக நடந்தது.திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வர்; நாள்தோறும் பூஜைகளில் பங்கேற்பர்.முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை, கோவில் குருசாமி மூர்த்தி தலைமையில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக, நேற்று பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அய்யப்ப சுவாமி திருப்போரூர் மாட வீதிகளில் வலம் வந்தார். இதில், ஏராளமான பெண்களும், அய்யப்ப பக்தர்களும் விளக்கு ஏந்தி வந்தனர். இரவு, 12:00 மணிக்கு அய்யப்ப ஜனனமும் நடந்தது.