பதிவு செய்த நாள்
15
டிச
2018
01:12
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., கருங்களாப்பள்ளி கிராமம், கிழக்கு காலனியில் உள்ள மாரியம்மன், விநாயகர், மாணிக்கமலையான், மதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணியளவில் கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, கிராம மக்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மேளதாளத்துடன் குளித்தலை கடம்பர் கோவில், பேராளகுந்தாளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வந்து, புனித நீரை கோவில் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை, 5.00 மணியளவில் யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 6.00 மணியளவில் இரண்டாம் கால பூஜை, 9:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் உற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.