கம்பம்:சுருளி அருவிக்குள் நுழையும் இடத்தில் சுருளியாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதி அண்ணாமலையார் கோயில்.கடந்தாண்டு கும்பாபிேஷகம் நடந்தது. அதையொட்டிநேற்று காலை வருஷாபிேஷகம் நடந்தது. முன்னதாக சிவலிங்கத்திற்கு பால், தயிர், விபூதி, பன்னீர்,தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.கம்பம் நகராட்சி முன்னாள் தலைவர் சிவக்குமார்,வேளாண் உதவி இயக்குநர் (ஓய்வு) ஜெயப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளைசிவனடியார் முருகன் சுவாமிகள், பக்தர்கள் குழு மற்றும் பொதுமக்கள் செய்தனர்.