பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் மாணிக்கவாசகர் காப்புகட்டுடன் ஆருத்ரா விழா துவங்கியது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என சிறப்புகள் பெற்ற நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அனைத்து தோஷ நிவர்த்தி ஏற்படும் தலமாக பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற வருகை புரிகின்றனர். இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் மாலை மாணிக்கவாசகர் காப்பு கட்டுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை கோயிலைச் சுற்றி மாணிக்கவாசகர் வலம் வருகிறார்.
சிவாச்சாரியர்கள் எட்டு திக்குகளிலும் திருவெம்பாவை பாடல்கள், மந்திரம் முழங்க வீதிவலம் செல்கின்றனர். அப்போது பல்வேறு வகையான நெய்வேத்தியங்கள் சுவாமிக்கு படைக்கப்படும். தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுக்கும் விதமாக ஆருத்ரா தரிசன விழா டிச., 23 அதிகாலை நடக்கிறது. நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிேஷகம் நிறைவடைந்து தீபாராதனை காட்டப்படும்.