பதிவு செய்த நாள்
16
டிச
2018
02:12
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் கோவில் உண்டியலில், காணிக்கையாக, 95 ஆயிரத்து, 758 ரூபாய் கிடைத்தது.
பரமேஸ்வர விண்ணகரம் என, அழைக்கப்படும், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில், 86வது திவ்யதேசமாக திகழ்கிறது. இக்கோவிலில், டிச., 18ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில், இக்கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் ஆ.குமரன், இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளர் ப.அலமேலு, கோவில் மேலாளர் சுதர்சனம் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் செலுத்திய, 95 ஆயிரத்து, 758 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.