Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; ... வில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா வில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 டிச
2018
11:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத பிறப்பு பூஜைகள் நேற்று (டிசம்., 16ல்) சிறப்பாக நடந்தன. மார்கழி, 30 வரை, தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு, கோவில் நடைதிறக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு, நேற்று (டிசம்., 16ல்) மதியம், 2:30 மணிக்கு, வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில், திருப்பாவை பட்டில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். அங்கு, கிரிபட்டர் சிறப்பு பூஜை நடத்தினார்.

பின்னர், அரையர் நாதமுனிமுகுந்தனின் அரையர்சேவையும், வேதபிரான் அனந்தராமன் பட்டரின் வேதம் படித்தலும், திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டும், தீர்த்தகோஷ்டி, சேவாகாலமும் நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல், மார்கழி, 30 வரை, தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கபடுகிறது. சொர்க்கவாசல் திறப்புவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆண்டாள் கோவிலில், நாளை காலை, 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, அதிகாலை, 3:30 மணிக்கு, பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காலை, 6:20 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவிக்க எழுந்தருள்கின்றனர்.பின்னர் மாடவீதிகள் சுற்றிவந்து, ராப்பத்து மண்டபம் சேருகின்றனர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரியபெருமாள் பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி முடிந்து, பிற்பகல், 3:30 மணிக்கு, ஆஸ்தானம் சென்றடைகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar