Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ... பட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம் பட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்

பதிவு செய்த நாள்

17 டிச
2018
11:12

 மாதங்களில், நான் மார்கழியாக இருக்கிறேன் என, பகவத் கீதையில், கிருஷ்ணர், இம்மாத த்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். மார்கழி மாதம் முழுவதும், இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.மார்கழியை, தனுர் மாதம் என்றும் அழைப்பர்.

இம்மாதம் முழுவதும், அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து, வாசலில் வண்ணக்கோலம் இட்டு, இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப் படுகிறது. இம்மாதத்தில், ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து, உடல்நலனை காக்கும் பொருட்டு, அதிகாலை வழிபாடு, இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில், அதிகாலை இறைவழிபாடு குறித்து, மாணிக்கவாசகர், திருவெம்பாவையிலும்; ஆண்டாள் நாச்சியார், திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில், கோவில்களில், அதிகாலை வழிபாட்டில், வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

ஏகாதசியை முன்னிட்டு, டிச.,18ல், பெருமாள் கோவில்களில் பரமப்பத வாசல் திறக்கப் படுகிறது. இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, விநாயகர் சஷ்டி விரதம் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. திருவாதிரை திருவிழாமார்கழியில், பவுர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான, ஆடலரசன் நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிமார்கழியில், வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில், திருமால் வழிபாடு மிகச்சிறப்பாகும். இவ்விழாவில், சொர்க்கவாசல் திறப்பு முக்கிய நிகழ்ச்சியாகும்.பாவை நோன்புஆயர்பாடியில் கோபியர்கள், மார்கழி மாதத்தில், அதிகாலையில் ஆற்றில் நீராடி, மண்ணால் செய்த, காத்யாயணி தேவியை வழிபட்டு, தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டுவர். பெண்கள் கடைப்பிடித்த இவ்விரதம், பாவை நோன்பு எனப்படுகிறது.திருவெம்பாவை நோன்புதிருவெம்பாவை நோன்பு என்பது, திருவாதிரைக்கு, ஒன்பது நாட்களுக்கு முன் கடைப்பிடிக்கப்படுகிறது. திருவாதிரையோடு சேர்த்து, மொத்தம், 10 விரத நாட்கள். இந்நோன்பில், சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர்.

இவ்விரதத்தின்போது, கன்னிப் பெண்கள், ஒரு வேளை, அவித்த உணவை மட்டுமே உண்டு, திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடுவர்.விநாயகர் சஷ்டி விரதம்கார்த்திகை மாதம், வளர்பிறை பிரதமை முதல் துவங்கி, மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை, 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.அனுமன் ஜெயந்திமார்கழி மாதத்தின் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று, அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar