தொண்டி தீர்த்தாண்டதானம் கோயில் கடற்கரையில் குப்பை மேடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 01:12
தொண்டி : தீர்த்தாண்டதானத்தில் பக்தர்களால் வீசப்படும் துணிகளால் கடற்கரை மாசு படிந்துள்ளது.
தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் சகலதீர்த்தேஸ்வரர் கோயில் உள்ளது. ராமர் சீதையை தேடி சென்ற போது இங்கு தங்கியிருந்து சுவாமியை வணங்கி சென்றதாக புராணம் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அப்போது அணிந்திரு ஆடைகளை கரை ஓரத்தில் விட்டு செல்வதால் மாசுபடிந்துள்ளது.
இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், மாத அமாவாசை நாட்களிலும், இறந்தவர் களுக்கு திதி கொடுக்கவும் ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் விட்டு செல்லும் துணிகளால் கடற்கரை மாசுபடிந்துள்ளது. கடற்கரையை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.