மேல்நல்லாத்தூர், முக்குளத்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 03:12
மணவாள நகர்: மேல்நல்லாத்தூர், முக்குளத்தீஸ்வரர் கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி மன்றம் சார்பில், உழவாரப் பணி நடந்தது.திருமுல்லைவாயல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி மன்றம் சார்பில், தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் உழவாரப் பணி நடந்து வருகிறது.கடந்த, 2010ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 104 சிவன் கோவில்களில், உழவாரப் பணி நடந்தது.
மேல்நல்லாத்தூர் முக்குளத்தீஸ்வரி உடனுறை முக்குளத்தீஸ்வரர் கோவிலில், 105வது உழவார திருப்பணி நேற்று 16ல் நடந்தது.இப்பணியில், 100 தன்னார்வலர்கள் பங்கு பெற்று, கோவில் வளாகம், திருக்குளம் ஆகியவற்றை தாய்மைப்படுத்தினர். மேலும், கோவில் அருகில், சாலைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளையும் வெட்டி அகற்றினர்.