பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
கொடுமுடி: சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழாவை முன்னிட்டு, எட்டு நாட்களுக்கு பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஊஞ்சலூர் ரயில்வே ஸ்டேஷனில், ஒரு நிமிடம் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில், சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. ஆண்டு தோறும் டிசம்பரில், ஆராதனை விழா, எட்டு நாட்களுக்கு நடக்கும். இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த ஊஞ்சலூரில், சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா வரும், 23 முதல், 31 வரை நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, ஈரோடு - கரூர் வழியே செல்லும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் எட்டு நாட்களுக்கு, ஊஞ்சலூர் ரயில்வே ஸ்டேஷனில், நின்று செல்லும். அதில், மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - காரைக்கால் மற்றும் காரைக்கால் - எர்ணாகுளம், மும்பை சி.எஸ்.டி - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்.கோயம்புத்தூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மைசூரு - மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை - மைசூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கோயம்புத்தூர் -ராமேஸ்வரம் ரயில், பாலக்காடு டவுன் -திருச்சி பாசஞ்சர் ரயில், திருச்சி - பாலக்காடு டவுன் உள்ளிட்ட, 14 எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் வரும், 23 முதல், 31 வரை எட்டு நாட்களுக்கு, தினமும் ஊஞ்சலூர் ரயில்வே ஸ்டேஷனில், ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.