பதிவு செய்த நாள்
17
டிச
2018
04:12
அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள, ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் சார்பில், ஸ்ரீ சாரதா தேவியார் ஜெயந்தி விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை, வரும், 28ல் நடக்கிறது.அன்று காலை, 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, திருப்பாவை பாராயணம், 6:00 மணிக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம், 7:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை, 12:00 மணிக்கு அர்ச்சனை, ஆரத்தி உள்ளிட்டவை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடக்கிறது.
உடுமலைபேட்டை சுவாமி தயானந்த ஆஸ்ரமத்தை சேர்ந்த சுவாமினி குருப்பிரியா அம்பா சிறப்பு சொற்பொழிவு நடத்துகிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ விவேகானந்த சேவாலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.