உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் உழவாரப்பணிகள் நடந்தது. மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும், புரதான சிறப் பினையும் பெற்றதாக விளங்குகிறது.இங்கு டிச., 22, 23 ஆகிய தேதிகளில் ஆருத்ரா தரிசனம் நடப்பதை முன்னிட்டு, கோயிலில் உழவாரப்பணிகள் நடந்தது.கோயிலின் உள், வெளிப்பிரகாரம், சன்னதி, முகப்பு மண்டபம், மரகதநடராஜர் சன்னதி ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் மதுரை நந்தி எம்பெருமான் உழவார திருப்பணிக் குழுவினர் 50 பேர் ஈடுபட்டனர். திவான் பழனி வேல் பாண்டியன்,செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர