பதிவு செய்த நாள்
22
டிச
2018
12:12
கோவை: கோவை பெரியகடைவீதி, டி.கே.மார்க்கெட் கே.கே.பிளாக்கில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோவிலில், நாளை திருப்பாவையின் எட்டாம் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்து சிறப்பு வழிபடுகின்றனர்.திருமணம் வேண்டுவோர், மூன்று மாலை, பூஜைக்கான மங்கலப்பொருட்களோடு இக்கோவிலில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமியை, மனதார வழிபாடு செய்ய வேண்டும்.
வழிபாடு செய்த சுவாமி மாலைகளை, வீட்டின் பூஜை அறையில் வைத்தால், அடுத்த ஓராண்டில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதத்தை ஒட்டி, இக்கோவிலில் நாளை காலை, திருப்பாவையின், கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு... என்று துவங்கும் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்பெண்ணே... கீழ்வானம் வெளுத்து விட்டது… கம்சனால் அனுப்பப்பட்ட, சாணூரான் போன்ற பெரிய மல்லர்களைக் கொன்ற, தேவாதி தேவன் கண்ணன். நீராடி அப்பெருமானை நாம் இந்நன்னாளில் வழிபடுவோம்.நீராட தனித்து புறப்பட்டவர்களையும் உனக்காக நிறுத்தி வைத்துள்ளேன். நாம் அனைவரும் நீராடி கண்ணனை வேண்டினால், ஐயோ பாவம் இப்பெண்கள் என்று மனமிறங்கி, நம் குறைகளை கண்ணன் நீக்கி அருள்வான் என்பதே இப்பாடலின் பொருள்.