பதிவு செய்த நாள்
24
டிச
2018
11:12
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், கனகதாசர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தலையில் தேங்காய் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை குருபர சங்கம், கனக ஜோதி சேவா சமிதி சார்பில், கனகதாசர் ஜெயந்தி விழா, நேற்று நடந்தது. கனகதாசர் பல்லக்கு உற்சவம், மங்கள வாத்தியங்களுடன், தேன்கனிக்கோட்டை முக்கிய வீதிகளில் சென்றது.தொடர்ந்து, கனகதாசர் ஒளிப்படத்துக்கு, புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தலை மீது கும்ப கலசம் சுமந்த பெண்கள், ஊர்வலமாக சென்றனர். தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே மதியம், 1:00 மணிக்கு குரும்பர் இன மக்கள், தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.