பதிவு செய்த நாள்
24
டிச
2018
11:12
திருப்பூர்: பொங்கலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், சோடஷ மகாலட்சுமி மகாயாக பூஜை, நேற்று துவங்கியது. கணபதி ஹோமம், கஜபூஜை, 108 அஸ்வ பூஜைகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்பங்கேற்றனர்.தொழில் வளம், விவசாயம் செழித்து, குடும்பங்களில் ஐஸ்வர்யம் பெருகவும், உலகநலம் வேண்டியும், ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூர் அருகே பொங்கலுாரில், சோடஷ மகாலட்சுமி மகா யாகம்நடத்தப்படுகிறது.மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு மங்கள இசை, கணபதிஹோமத்துடன் துவங்கியது.பின், லட்சுமி என்ற யானைக்கு கஜபூஜை நடந்தது. நாகசக்தி பீடம் சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமி தலைமையிலான குழுவினர், யாக பூஜைகளை நடத்தினர்.தொடர்ந்து, 108 அஸ்வ பூஜைக்கு 200க்கும் அதிகமானகுதிரைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.
யாக சாலை பூஜைகளை தொடர்ந்து, சிவலிங்கேஸ்வர சுவாமி, வராஹி மணிகண்ட சுவாமி, ஒவ்வொரு குதிரைக்கும் மலர் சூட்டி, வஸ்திரம் அணிவித்து, ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர்.நேற்று, 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மாலை, 3:00 மணிக்கு, மீனாட்சி திருக்கல்யாண வைபவம் துவங்கியது. ஆடல் வல்லான் அறக்கட்டளையினர், திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர்.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்பேசியதாவது:யாகசாலை பூஜைகளில் பங்கேற்க வந்தவர்கள், யானை, குதிரை, கோமாதா பூஜைகளில் பங்கேற்க வேண்டும். இறைவன் நடத்தும் இந்த யாகத்துக்கு வந்து, புண்ணிய பூமியில் அமர்ந்து சென்றாலே,முழு பலன் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், ஒட்டுமொத்த ஹிந்து மக்களும், உலக மக்களும் நன்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான்,ஹிந்து முன்னணி,மகாலட்சுமி யாகம்நடத்துகிறது. மூன்று நாட்கள்நடக்கும் யாக பூஜைகளில் பங்கேற்று, அனைவரும் பயன்பெற வேண்டும், என்றார்.தர்மராஜா அருள்பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமி,கோவை ஆதீனம் பாலமுருகன் அடிமை சுவாமி உள்ளிட்டோர், அருளாசி வழங்கினர். பல்லாயிரக்கணக்கானபக்தர்கள் பங்கேற்றனர்.இன்று, 1008 கோ பூஜைஇன்று காலை, 9:00 மணிக்கு சோடஷ மகாலட்சுமி மகாயாகம் துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு, 1,008 கோ பூஜை வழிபாடும், மாலை, 3:00 மணிக்கு, ஆண்டாள் திருக்கல்யாண வைபவமும் நடக்க உள்ளது. மாலை, 4:00 மணிக்கு, சோடஷ மகாலட்சுமி மகா யாகத்தின், இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடக்கின்றன. நாளை, ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்கும் மகாலட்சுமி மகாயாக பெருவிழா நடக்க உள்ளது. மொத்தம், 5 லட்சம் பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.