பதிவு செய்த நாள்
24
டிச
2018
01:12
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில், மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.திருவாதிரைக்கு ஒருவா கழி என்பது பழமொழி. திருவாதிரையில் சிவனை தரிசிப்பவர்களுக்கு ஆயுளுக்கும் இன்பம் பொங்கும் என்பது அர்த்தம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி திருவாதிரையில், நடராஜருக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. பின் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்தனர்.
தெய்வீக பேரவை தலைவர் ஜெயராமன், பேராசிரியர் பாண்டியன் சொற்பொழிவு ஆற்றினார்கள். கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் விரியன்சுவாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், தி.மு.க., அவைத்தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார். பிரசாதம் வழங்கப்பட் டது. நான்கு ரத வீதிகளில் சுவாமி நகர்வலம் நடந் தது.போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 லிட்டர் பாலபிஷேகம் கோயில் தலைவர் திவாகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் மனோகரன், பொருளாளர் பாலமுருகன், துணைத் தலைவர் குமரேசன், துணை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித் தனர்.நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரங்களை சேகர் சாஸ்திரிகள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அலங்காரங்களை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார்.