ஸ்ரீ மஹா பெரியவா ஆசியுடன் தனுர் மாதத்தை முன்னிட்டு டிசம்பர் 29 சனிக்கிழமை, மற்றும் 30 ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும், காலை 5.00 முதல் 7 .30 மணி வரை நாம சங்கீர்த்தனத்துடன் கூடிய ஸ்ரீமஹாபெரியவாளுடன் திருவீதி உலா நங்கநல்லூரில் உள்ள பல பிரதான வீதிகளில் நடைபெறும். வீதியுலா விபரக்குறிப்பு அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆஸ்தீக அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து குருக்ருபைக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.