ஆருத்ரா தரிசனம்: மார்கழியிலும் பக்தர்கள் மாவிளக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2018 01:12
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத கடைஞாயிறு உற்சவம் முடிந்தும், ஆருத்ரா தரிசன உற்சவமான நேற்று, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர்.காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையில், கடைஞாயிறு உற்சவம் நடைபெறும். மார்கழி பிறந்து இரண்டாவது வாரமான நேற்றும், பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். இதனால், ஆருத்ரா தரிசனத்திற்காக வந்தவர்கள் மற்றும் மாவிளக்கு எடுக்க வந்த பக்தர்களால், கச்சபேஸ்வரர் கோவிலில் கூட்டம் அலைமோதியது.