பதிவு செய்த நாள்
24
டிச
2018
02:12
ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், சிற்பங்களை மறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், தானுகந்த திருமேனியாக, ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த கோவிலில், கலை நயமிக்க ஏராளமான சிற்பங்கள் உள்ளன.இந்நிலையில், 2008ம் ஆண்டு நடந்த திருக்குட முழுக்கு விழா, 2004ல் நடந்த திருப்பணி, நன்கொடையாளர்கள் மூலம் நடந்த திருப்பணிகள் குறித்த அடுத்தடுத்து ஐந்து கல்வெட்டுகள், கோவில் சுவற்றை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டுகளால், கோவில் சுவற்றில் உள்ள சிறிய அளவிலான அழகிய சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளன.எனவே, சிற்பங்களுக்குப் பாதிப்பில்லாத வகையில், இந்த கல்வெட்டு களை அகற்றி, வேறு இடத்தில் வைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்