ராசிபுரம்: ராசிபுரம், சுற்றுவட்டார பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து, விழாவுக்கு தயாராகி வருகின்றனர். நாளை, (டிசம். 25ல்)கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. ராசிபுரம் பகுதியில் ஸ்டார், தொப்பி, கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை சூடுபிடித் துள்ளது. கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார் லைட் தொங்கவிட்டுள்ளனர்.
சிலர் வீடுகளில், கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைத்துள்ளனர். காக்காவேரி வெங்காயபாளையம் பகுதியில் உள்ள, எஸ்.எப்.எஸ். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிலையும், பொதுமக்கள் அதிகளவு பார்த்து செல்கின்றனர். நேற்று (டிசம்., 23ல்) ஞாயிற்றுக் கிழமை என்பதால், துணி மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அலை மோதியது.