பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
தர்மபுரி: சிவன் கோவில்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்பிகை உடனுறை, கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், நேற்று (டிசம்., 23ல்) ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில், அதிகாலை, 3.45 மணிக்கு திருசிற்றம்பல சபையில், நடராஜருக்கு, 16 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பால், தயிர், மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, பழங்கள் உட்பட, பல்வேறு அபிஷேக ங்கள் நடந்தன. 7:30 மணிக்கு, திட்டிவாசலில் நடராஜர், தம்பதி சமேதராக, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு சேந்தனார்க்கருளிய திருவாதிரைக்களி பிரசாதமாக வழங்கப்பட்டது.
* தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று (டிசம்., 23ல்) காலை, 4:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு, 16 திரவியங்களால், அபிஷேகம், திருமுறை பாராயணம், தீபாராதனை நடந்தது.