பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
கரூர்: பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின், 32ம் ஆண்டு விழா முன்னிட்டு, சீதா கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.
கரூர், பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் ஆண்டு விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத் தில், கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும், நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) காலை, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடந்தது. விழாவில், 18ம் ஆண்டாக,பெங்களூரு ருக்மணி பஜன் மண்டலி குழுவினர் நடத்தி வைத்த சீதா கல்யாண உற்வச விழா, துவங்கியது. இரவு, ராமர் சீதா உற்சவர் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இன்று காலை, கணபதி ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் நடக்கவுள்ளது. மதியம், 1:00 மணிக்கு, ஸ்வர்ண மங்கள ஹோமம் நடக்கவுள்ளது. இதன் பின் மாலை, 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, 26ல், ஏக தின லட்சார்ச்சனையும் நடக்கவுள்ளது.