குளித்தலை: குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி அருகே, நாகநோட்டக்காரன்பட்டி காளியம்மன் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று 23ல் மாலை, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காக, பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்து வழிப்பட்டனர். இதில் பாதிரிப்பட்டி, நாகநோட்டக்காரன்பட்டி கிராம பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து காளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. விழாக்குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.