பதிவு செய்த நாள்
24
டிச
2018
05:12
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் தயாராகி வருகின்றன.கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர்.
இல்லங்களில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை கட்டியும், கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து வருகின்றனர்.புதுச்சேரியில் உள்ள சர்ச்சுகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை சாலையோட்டியுள்ள கப்ஸ் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் குடில் மற்றும் வண்ண விளக்குகளால் ஆன கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் 30 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் மற்றும் மெகா சைஸ்சில் மின்விளக் கொளியில் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப் பட்டுள்ளது. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
* கோவை:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை (டிசம்., 25ல்) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை, அதிகாலை பிராத்தனை நடக்க உள்ளது. இதற்காக கோவையில் உள்ள தேவாலயங்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துவ ஆலயங்களில் இன்று (டிசம்., 24ல்) இரவு, 9:00 மணி முதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் ஊர்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முக்கிய சந்திப்புகள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பணிகளை அதிகரிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.