குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகர் கிளை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், திருவிளக்கு திருவீதி உலா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி, கணபதி, முருகன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தபடி வந்தனர். மாவட்ட செயலாளர் ஜெகதீஸ் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, வீதி உலாவை துவக்கி வைத்தார். இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில், கேரள மூத்த குருசாமி பெருங்காட்டுக்கோவு இளவஞ்சேரி பங்கஜாஸ் குருசாமி ஆசி வழங்கியபடி பங்கேற்றார். வழி நெடுக, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், விளக்குகள் ஏந்தியவாறு சரண கோஷமிட்ட வாறு வந்தனர். ஐயப்பன் கோவிலில் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.