பதிவு செய்த நாள்
26
டிச
2018
02:12
பொன்னேரி: பொன்னேரி அடுத்த, திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின், 38ம் ஆண்டு விளக்கு பூஜை, நாளை (டிசம்., 28ல்), மாலை, 6:00 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவேங்கிடபுரம் ஸ்ரீதேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, பொன்னியம்மன் ஆலயத்திற்கு அய்யப்ப சுவாமி ஊர்வலம் நடைபெறும்.நகரியில் ரூ.2க்கு 20 லிட்டம் குடிநீர்நகரி : சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை கிராமத்தில், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி சார்பில், கிராம மக்களுக்கு, இரண்டு ரூபாயில், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை, நகரி எம்.எல்.ஏ.,வும், நடிகையுமான ரோஜா, நேற்று(டிசம்., 25ல்), முதற்கட்டமாக சிந்தலப்பட்டடையில் துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசுகையில், கடந்த மாதம் நான்கு ரூபாய்க்கு, நடமாடும் வேன் மூலம், உணவு வழங்கும் திட்டத்தை என் சொந்த செலவில் துவக்கி வைத்தேன்.
தற்போது, இரண்டு ரூபாய்க்கு, 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளேன் என்றார்.டி.எஸ்.பி., பொறுப்பேற்புகும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பொறுப்பில் இருந்த ரமேஷ், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக, கல்பனா தத், நேற்று, பொறுப்பேற்று கொண்டார். அவர், இதற்கு முன், சிவகங்கை மாவட்டத்தில், பயிற்சியில் இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.