பதிவு செய்த நாள்
26
டிச
2018
02:12
திருவண்ணாமலை: ரமணரின், 139வது ஜெயந்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையில், செங்கம் சாலை, கிரிவலப்பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில், ரமணரின், 139வது ஜெயந்தி விழா, நேற்று (டிசம்., 25ல்) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நேற்று (டிசம்., 25ல்) காலை, 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ருத்ரஜெபம், ரமணர் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், மங்கள ஆரத்தி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இசையமைப்பாளர்
இளையராஜா, ரமணர் கீர்த்தனைகள் பாடினார். கலெக்டர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.