தேவகோட்டை : தேவகோட்டை தர்ம சாஸ்தா பஜனை குழு சார்பில் சிலம்பணி ஊரணி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. தினமும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. டிச., 24 ல் பால்குடம், பொன்னுாஞ்சல் நிகழ்ச்சி, டிச., 25 ல் ஏகதின லட்சார்ச்சனை் நடந்தன. நேற்றுமுன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். நேற்று மஹா அபிஷேகம், மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடந்தன. தொடர்ந்து இரவு ஐயப்பசாமி நகர்வலம் நடந்தது.