பதிவு செய்த நாள்
28
டிச
2018
02:12
பழநி: பழநி அருகே சுக்கமநாயக்கன்பட்டியில் நடந்த, சபரிமலை ஐயப்பசுவாமி மண்டல பூஜைவிழாவில், காலை முதல் இரவு வரை தொடர்ந்து 12மணிநேரம் அன்னதானம் வழங்கப்பட்டது. சுக்கமநாயக்கன்பட்டி சித்திவிநாயகர் கோயிலில் 11ம் ஆண்டு சபரிமலை சாஸ்தா மண்டலபூஜை விழா நடந்தது. இதில் கும்ப கலசங்கள் வைத்து, கணபதிபூஜையுடன், சித்திவிநாயகர், உச்சிகாளியம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தது. அதன்பின் சுவாமி ஐயப்பனுக்கு பால், பழங்கள், தயிர், தேன் போன்ற 16வகை அபிஷேகமும், பழங்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. காலை 8:00மணி முதல் இரவு 8:00மணி தொடர்ந்து அப்பம், பாயசம், வடையுடன் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடந்த ஸ்ரீசக்ரபூஜை, பஜஜை வழிபாட்டில் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.---