பதிவு செய்த நாள்
28
டிச
2018
03:12
சென்னிமலை: ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில், பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் வழிபட்டனர். சென்னிமலை அருகே, ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில், கொங்கு வேளாள கவுண்டர்களின் ஒரு தரப்பினரின், குலதெய்வ கோவிலாக உள்ளது. இங்கு பொங்கல் விழா, கடந்த மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம், தீர்த்த ஊர்வலம் மற்றும் அபி?ஷகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை, ஆயிரக்கணக்கான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். ஈங்கூர் மட்டுமின்றி அவினாசி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சேலம், பழநி பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் சலங்கை ஆட்டம், பெண்கள் கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர். மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், விழா இன்று நிறைவு பெறுகிறது.
பொங்கல் வைபவம்: சென்னிமலை நகரின், எல்லை காவல் தெய்வமாக திகழும், எல்லை மாகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று காலை வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் மக்கள் வழிபாடு நடத்தினர். இன்று, மறு பூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம கவுண்டர்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.