பதிவு செய்த நாள்
29
டிச
2018
11:12
உடுமலை:உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 7ம் தேதி துவங்கியது. பகல் பத்து உற்சவம், 18ம் தேதி, சொர்க்கவாசல் திறப்பு, அதனை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம், திருவாய் மொழி திருநாள் நடந்து வந்தது. தினமும் சுவாமிகளுக்கு திருமஞ்சனம், பல்வேறு அலங்காரங்களில், பூமி நீளாநாயகி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவில், நேற்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் விழா நடந்தது. சாற்று மறை, மகா தீபாராதனை நடந்தது.