அவிநாசி: அம்மாபாளையம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர், கோவில் பொங்கல் விழா கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுன் தொடங்கியது.தினமும் இரவு அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. 23ம் தேதி பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல், 24ம் தேதி காலை விநாயகருக்கு பொங்கல் வைத்தனர். இரவு படைக்கலம், அம்மை அழைத்தல், நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் காலை மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பொங்கலன்று கலை நிகழ்ச்சியும் நடந்தது.