பதிவு செய்த நாள்
29
டிச
2018
12:12
வால்பாறை: வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 59ம் ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று காலை, 5:15 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.விழாவில் இன்று, (29ம்தேதி) காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும், மாலை, 3:00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவில், நாளை (30ம்தேதி) மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.