பதிவு செய்த நாள்
29
டிச
2018
12:12
அருப்புக்கோட்டை : கோலம் என்றாலே மங்கையர்களுக்கு அலாதி பிரியம். பாரம்பரியம் மிக்க இதை வீடுகளின் முன்பு, அரிசி மற்றும்பூக்களை கொண்டுவரைவர்.அக்காலத்தில் அரிசி மாவில் தான் கோலம் போடுவர். இதற்கு காரணமே எறும்புகள், பூச்சியினங்கள் வாசலில் அரிசி மாவால் போடப்பட்ட கோலத்தை வந்து சாப்பிடும் என்பதுதான்.
இவ்வாறு செய்வதன் நோக்கம் நம் முன்னோர்கள்பூச்சி வடிவில் வந்து அரிசி மாவை உண்டு நம்மை வாழ்த்தி ஆசிர்வதித்து செல்வர் என்பது ஐதீகம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கோலங்கள் புது மாதிரியான வடிவம் பெற்று, கெமிக்கல் கலந்த பொடிகளால் வண்ண டிசைன்களில் ரங்கோலி கோலங்கள் போடப்படுகிறது.மார்கழி மாதத்தின் ஸ்பெஷல் ரங்கோலி கோலங்கள் தான். கலர் கலரான பொடிகளை தயார் செய்து பல வகையான கோலங்களை மார்கழி மாத முதல் நாளிலிருந்து அதிகாலையில் போட மங்கையர்கள் தயார் ஆவர். தினமும் ஒவ்வொரு விதமான கோலங்களை வீட்டு வசாலில் இட்டு அசத்துவர். ரங்கோலியில் கோலம் போட அதிக கற்பனை திறன், கலர் பொடிகளை பயன்படுத்துவது போன்றவை தேவையாகஉள்ளது. இவ்வகை கோலங்கள் போட 2 முதல் 3 மணி நேரம் வகை ஆகும்.
இயற்கை காட்சி, படங்கள், தேச தலைவர்கள் டிசைன்களில் ரங்கோலி போடப்படுகிறது. தண்ணரில் மிதக்கும் கோலங்கள் கூட போடப்படுகிறது.இந்த வகை ரங்கோலி கோலங்களை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அருப்புக்கோட்டை அண்ணாமலை நாடார் தெருவை சேர்ந்த சாந்தி, அமுதா ஆகியோர் மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் தினமும் போட்டு அசத்துகின்றனர். ஒவ்வொருநாளும் பூக்கள், அரிசி, உப்பு, கலர் கலரான கோல பொடிகள் வைத்து விதவிதமான டிசைன்களில் இயற்கை காட்சி, பூக்கள், உருவங்கள் என கற்பனை திறனை ஓட விட்டு கோலங்களை வரைகின்றனர்.உற்சாகம் பிறக்கும்நான் 40 ஆண்டுகளாக மார்கழி மாதத்தன்று வாசலில் ரங்கோலி கோலம் போட்டு வருகிறேன் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது உற்சாகத்தையும், புத்துணர்வையும் அளிக்கிறது.கை விரல்களுக்கு நல்ல பயிற்சி. மூளைக்கு நல்ல வேலை.மற்றவர்கள் கோலத்தை பார்த்து பாராட்டும் போது கூடுதல் உற்சாகத்தை தருகிறது.சாந்தி, குடும்பத்தலைவிபிடித்தமான ஒன்றுஅதிகாலையில் எழுவது உடலுக்கு நல்லது. அதுவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது மகிழ்ச்சியான ஒன்று. நாங்கள் தொடர்ந்து 40 ஆண்டுகளாக கோலம் போட்டு வருகிறோம்.நல்ல கற்பனை திறன் வளரும். கை விரல்களுக்கு பயிற்சி. குனிந்து, நிமிர்ந்து கோலம் போடும் போது உடல் முழுவதிற்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது.மார்கழியில் கோலம் போடுவது பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அமுதா, குடும்பதலைவிகோலம் இட்ட வீடு கோயில்தமிழர்களின் பாரம்பரிய கலையில் பெண்கள் கோலம் போடுவதும் ஒன்று.விசேஷ நாட்களில் வீடுகளில் நம்மை முதலில் வரவேற்பது கோலம் தான்.இன்றைய காலத்தில் கோலம் போடுவதை பெண்கள் மறந்து போனாலும், மார்கழி மாதத்தில் மட்டும் மறக்காமல்வாசல்களில் கோலம் போட்டு அசத்துகின்றனர்.கோலம் போடுவது பெண்களுக்கு ஒருவிதமான பாசிடிவ் எனர்ஜி யை கொடுக்கும். கோலம் இட்ட வீடு கோயில் என்பார்கள்.சுகன்யா தேவி,குடும்பதலைவி.