ஸ்ரீபெரும்புதுார்: ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ராமானுஜ நுாற்றந்தாதி சாற்று முறை நேற்று நடந்தது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 18ம் தேதி, இராப்பத்து உற்சவம் துவங்கியது. 10 நாட்கள் நடந்த இந்த விழா, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதை தொடர்ந்து, இயற்பா சாற்று முறை, ராமானுஜ நுாற்றந்தாதி சாற்று முறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.