பதிவு செய்த நாள்
29
டிச
2018
01:12
மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜம் 67 வது ஆண்டு இசை விழா ஜன., 3 துவங்கி 12 வரை நடக்கிறது. தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் துவக்க விழா ஜன., 3 மாலை 5:30 மணிக்கு சமாஜம் தலைவர் ஷோபனா ராமச்சந்திரன் தலைமையில் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சிக்கில் குருசரண் குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடக்கிறது. ஜன., 4 காயத்ரி வெங்கடராகவன், ஜன., 5 ராமகிருஷ்ணன் மூர்த்தி, ஜன., 6 பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், ஜன.,7 மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம்பிரசாத், ரவிக்குமார், ஜன., 8 பிரசன்ன வெங்கட்ராமன், ஜன., 9 சாகேதராமன், ஜன.,11 பிரியா சகோதரிகள் சண்முகப்பிரியா, ஹரிப்பிரியா ஆகியோரின் வாய்ப்பாட்டு கச்சேரிகள், ஜன.,10 ராஜேஷ்வைத்யா குழுவின் வீணை கச்சேரி, ஜன., 12 தியாகராஜர் என்ற தலைப்பில் டிவி வரதராஜன் குழுவினரின் இசை நாடகம் நடக்கிறது. நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6:00 மணிக்கு துவங்கும். தனி ஒரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், பத்து நாள் நிகழ்ச்சிக்கும் 500 ரூபாய் நன்கொடை உண்டு.