பதிவு செய்த நாள்
30
டிச
2018
12:12
கோவை:குனியமுத்துார், ஐயப்பன் கோவில் ஆண்டு விழா, ஜன., 1ல் நடக்கிறது.அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் விழா துவங்குகிறது. காலை, 6:00க்கு, அலங்கார பூஜை, மாலை, 6:00க்கு, தீபாராதனை நடக்கின்றன. 2ம் தேதி காலை முதல் மாலை வரை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.ஜன., 3ம் தேதி, காலை, 11:00க்கு அன்னதானம், மாலை, 5:00க்கு குனியமுத்துார் பழனியாண்டவர் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட யானைகள், பஞ்சவாத்தியம், செண்டைமேளம், காவடியாட்டத்துடன், கோவில் வரை ஊர்வலம் நடக்கிறது. இரவு, 10:00க்கு, சிறப்பு பூஜை மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.