கிணத்துக்கடவு:மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, குருநல்லிபாளையம் காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது.கிணத்துக்கடவு, வடசித்துார் அடுத்துள்ள குருநல்லிபாளையம், காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. நேற்று, தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியின் போது, காலபைரவரை வழிபடுவது சிறப்பானது என்பதால், நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.