Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளஹஸ்தி உண்டியலில் ரூ.1.31 கோடி ... 5 நாள் காத்திருந்த கோதண்டராமர் சிலை புறப்பட்டது 5 நாள் காத்திருந்த கோதண்டராமர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: நெய்யபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: நெய்யபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 டிச
2018
11:12

சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரி மலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நெய்யபிஷேகம் ஆரம்ப மாகிறது. 144 தடை உத்தரவு ஜன., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மண்டலபூஜை முடிந்து டிச., 27- இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றினார்.தொடர்ந்து கோயிலை வலம் வந்த மேல்சாந்தி, 18- படி வழியாக இறங்கி ஆழியில் தீ வளர்த்தார். அவர் திரும்பிய பின்னர் 18 படி வழியாக பக்தர்கள் ஏறி வந்தனர். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த பின் மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார். ஜன., 18- காலை 10:00 மணி வரை தினமும் நெய்யபிஷேகம் நடைபெறும். கடந்த இரண்டு நாட்களாக வந்த பக்தர்கள் நிலக்கல்லில் தங்கி யிருந்தனர். அங்கிருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று காலை 11:30 மணிக்கு பின்னர்தான் பம்பைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதனால் நேற்று காலை முதலே பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு நடந்தே வந்தனர்.பஸ்களில் பக்தர்கள் வந்த பின்னர் பம்பையில் கூட்டம் அதிகரித்தது. பகல் 2:00 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். நடை திறந்த போது சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஜன., 14ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜன., 12-ல் திருவாபரணம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. ஜன.,18- காலை 10:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ம் தேதி மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடக்கிறது. சபரிமலையில் போராட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பத்தணந்திட்டை எஸ்.பி. கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து ஜன., 5 வரை இலவுங்கல், நிலக்கல், பம்பை, சன்னி தானம் ஆகிய இடங்களல் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar