செம்பாக்கம்: செம்பாக்கத்தில், திருவாசகம் முற்றோதுதல் நேற்று நடந்தது. திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அழகாம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், செம்பாக்கம் சிவனடியார்கள் கூடி ஆடவல்லான் திருவாசக முற்றோதுதல் மற்றும் பவுர்ணமி அன்னதான திருச்சபையை துவக்கியுள்ளனர். மாதந்தோறும் வசந்த மண்டபத்தில் திருவாசகம் பாடி, சிவபெருமானை வழிபடுகின்றனர். அந்த வகையில் நேற்று, 75வது மாத திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திருவாசகத்தை படித்தனர்.