பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
புதுச்சேரி: உலக நன்மை வேண்டி, புதுச்சேரி வேத பாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில், அந்தணர்களுக்கான, ஒரு நாள் சந்தியா வந்தன பயிற்சி மற்றும் பெண்களுக்கான அனுஷ்டானங்கள் பயிற்சி முகாம், நம் குடும்ப விழா என்ற தலைப்பில் நடந்தது. புதுச்சேரி, லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சாலை சங்கர வித்யாலயா பள்ளியில் நடந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட அந்தணர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சென்னை வேத பாரதி தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி, பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். காலை 6:45 மணிக்கு ப்ராத கால சந்தியா வந்தன பயிற்சியும், குழந்தைகளுக்கு ஸமிதாதானம், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கு எளிய யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பயிற்சிகளும், பெண்களுக்கு சுமங்கலி பிரார்த்தனை, அனுஷ்டான குறிப்புகள் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பொறியாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.