பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு நாளை புத்தாண்டை முன்னிட்டு விசேஷ அலங்காரம் செய்ய விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர்.செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா குறித்த ஆலோசனை கூட்டம் பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்தது. வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு குழுசெயலர் ஏழுமலை தலைமை தாங்கினார். செஞ்சி கூட்டுறவு விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை சங்க தலைவர்விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். செல்வம் வரவேற்றார். வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், விழா குழுவினர் சீனுவாசன், கலியமூர்த்தி, சேகர், ரவி, முருகன், சோமு, சண்முகம், தினேஷ், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதில் நாளை ஆங்கில புத்தாண்டு அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் செய்வதுடன், காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்தனர்.