பதிவு செய்த நாள்
31
டிச
2018
12:12
நாமக்கல்: இந்து உணர்வாளர்கள் அமைப்பு சார்பில், ஆலோசனை கூட்டம் நாமக்கல்-மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில் நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நித்யா சர்வானந்தா தலைமை வகித்தார். கூட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆகம விதிகளை காக்க வலியுறுத்தி, கேரளா மாநிலம் முழுவதும், பொதுமக்களின் தீபஜோதி நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து உணர்வாளர்கள், பல்வேறு ஆன்மிக இயக்கங்கள் இணைந்து வரும் ஜன., 26ல், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகம விதிகளை காக்க வலியுறுத்தி, நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட, 200 கிராமங்களில் இருந்து, ஜோதி ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஜோதி ஊர்வலம், நாமக்கல் அரங்கநாதர் கோவில் வழியாக, ஐயப்பன் கோவிலை அடைவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.