காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவிலில், மஹா சண்டி ஹோமம் நேற்று நடந்தது.அகில இந்திய சாதுசெட்டி, 24 மனை தெலுங்கு செட்டியார்களின் சங்க தலைவர், டி.பாலகிருஷ்ணா தலைமை வகித்தார்.காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலையில், திருவிளக்கு பூஜை நடந்தது.இதில், தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.